விஜய் முதல்வராவதைச் சிக்கலாக்கிய காங்கிரஸ் கட்சி?

தவெக தலைவர் விஜய் முதல்வராவதைக் காங்கிரஸ் கட்சியே கெடுத்துள்ளதென்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

ஆட்சிமைக்க ஆதரவு வழங்குவதாகக் காங்கிரஸ் தெரிவித்ததில் சூழ்ச்சி இருக்கிறதென்றும் அதனை அவசரப்பட்டு ஏற்றது விஜய்யின் அரசியல் முதிர்ச்சியின்மை என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஏனெனில், இன்றைய சூழலில் அதிமுக இன்றி ஆட்சியமைப்பது சாத்தியமில்லை என்றாகிவிட்டது. காங்கிரஸ் ஆதரவளித்திருக்கும் நிலையில் அதிமுகவும் ஆதரவளிப்பதென்பதை எதிர்பார்க்கவே முடியாது.

பிஜேபியை மீறி முடிவெடுக்கும் திறன் சேலத்தாருக்கு இருக்கிறதா என்பது சந்தேகமே.

அந்த வகையில் திமுகவும் காங்கிரஸும் சேர்ந்து செய்த சதியாகவே இதனைப் பார்க்கவேண்டியிருப்பதாகக் கூறுகிறார்கள் அரசியல் ஞானம் உள்ளவர்கள்.