தமிழ்நாடு, கேரளம், மேற்கு வங்க முதல்வர்கள் பின்னடைவு!

தமிழ்நாடு, கேரளம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களின் முதல்வர்கள் பின்னடைவைச் சந்தித்துள்ளனர்.

தமிழ்நாடு, கேரளம், மேற்கு வங்கம், அஸ்ஸாம்,புதுவை சட்டப்பேரவைகளுக்கு நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. அஸ்ஸாம்,புதுவையில் மீண்டும் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

அஸ்ஸாம் முதல்வரும் பாஜக தலைவருமான ஹிமந்த பிஸ்வ சர்மா தொடர்ந்து முன்னிலை வகிக்கும் நிலையில், புதுவை முதல்வரும் என்.ஆர். காங்கிரஸ் தலைவருமான அரங்கசாமி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு, கேரளம்,மேற்கு வங்கத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும் நிலையில், முன்னிலை நிலவரம் இருக்கிறது. தமிழ்நாட்டில் தவெகவும், கேரளத்தில் காங்கிரஸும், மேற்கு வங்கத்தில் பாஜகவும் ஆட்சி அமைக்கத் தேவையான இடங்களில் முன்னிலை பெற்றுள்ளன.

இந்த நிலையில், தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலினும், கேரள முதல்வர் பினராயி விஜயனும், அவரவர் தொகுதியில் பின்னடைவை சந்தித்துள்ளனர்.