முன்னாள் ஜனாதிபதி பிரேமதாசாவின் 33 ஆவது சிரார்த்த நாள்

முன்னாள் ஜனாதிபதி மறைந்த றணசிங்க பிரேமதாசாவின் 33 ஆவது சிரார்த்த நாள் இன்று மே 01 ஆகும்.

அமரர் பிரேமதாசாவின் சிரார்த்த தினத்தை நினைவுகூரும் வகையில், கொழும்பு, ஹுணுபிட்டி கங்காராம விகாரையில் நேற்று (30) மாலை தர்ம போதனை நிகழ்வுகள் இடம்பெற்றன.

ஹுணுபிட்டி கங்காராம விகாரையின் பிரதம விகாராதிபதி கலாநிதி சங்கைக்குரிய கிரிந்தே அஸ்ஸஜி நாயக தேரரின் அழைப்பின் பேரில், சங்கைக்குரிய தந்திரிமலை சரண தேரர் தர்ம போதனையை நிகழ்த்தினார்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசா, அவர் தாயார் ஹேமா பிரேமதாசா, பாரியார் ஜலனி பிரேமதாசா உள்ளிட்ட ரணசிங்க பிரேமதாசாவின் குடும்பத்தவர்கள், உறவினர்கள், நண்பர்கள் எனப் பெருந்திரளானோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.