தேசிய மக்கள் சக்தியின் ஜனநாயக மக்கள் அதிகாரம் என்னும் தலைப்பின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்ட தொழிலாளர் தினப் பேரணியு மே தினக் கூட்டமும் இன்று அமைச்சர் சுனில் ஹிந்துன்னெத்தி தலைமையில் நண்பகல் மட்டக்களப்பில் இடம்பெற்றது
மட்டக்களப்பு கல்லடி பாலத்தில் இருந்து ஆரம்பமான தொழிலாளர் தின ஊர்வலமானது நகரின் பிரதான வீதிகள் ஊடாக சென்று மட்டு காந்தி பூங்காவை வந்தடைந்த பின்னர் மே தினக் கூட்டம் இடம் பெற்றது
இந் நிகழ்வில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு, பிரதேச அமைப்பாளர்கள், தொழிலாளர் சங்கப் பிரதிநிதிகள், மதத் தலைவர்கள், தொழிலாளர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
தொழிலாளர்களின் உரிமைகளை வலியுறுத்தும் கலை கலாசார நிகழ்வுகளும் தொழிலாளர் தின சிறப்புரைகளும் இங்கு இடம் பெற்றன.
எஸ். வரதராஜன்






