டயகமையிலிருந்து ஹற்றன் சென்ற பஸ் விபத்து: 20 பேர் காயம்

ஹற்றனில் இன்று ஏப்பிறல் 29 இடம்பெற்ற பஸ் விபத்தில் ஒருவர் உயிரிழந்து பாடசாலை மாணவர் உட்பட 20 பேர் காயமடைந்தனர்.

உயிரிழந்தவர் தோட்ட மருத்துவ உதவியாளர்-EMA- எனப் பொலிஸார் தெரிவித்தனர்.

டயகமையிலிருந்து கொணக்கொல்லை (போடைஸ்) வழியாக ஹற்றன் சென்ற தனியார் பஸ் இன்று பிற்பகல் மூன்று மணியளவில் மற்றொரு பஸ்ஸுக்கு வழிவிட முயற்சித்தபொது சுமார் 25 அடி பள்ளத்தில் சரிந்து வீழ்ந்தது.

அப்போது 35 பேர் பஸ்ஸில் பயணம் செய்துள்ளனர். விபத்தில் ஓட்டுநரும், நடத்துநரும் உட்பட 20 பேர் காயமடைந்தனர். விபத்துக்குள்ளான பஸ்ஸில் டொரிங்டன் பாடசாலை ஆசிரியர் சிலரும் பயணித்துள்ளதாகத் தெரியவருகிறது.

காயமடைந்தோர் டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். சம்பவம் குறித்து ஹற்றன் பொலிஸார் விசாரணை நடத்துகின்றனர்.

கௌசல்யா