ஈஸ்டர் தாக்குதல் ஏழாண்டு நினைவுப் பிரார்த்தனை

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் நடைபெற்று 07ஆண்டுகள் நிறைவினையொட்டி மட்;டக்களப்பில் பல்வேறு நிகழ்வுகள் இன்று பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நடைபெற்றன.

மட்டக்களப்பு நகரில் காந்தி பூங்காவில் உள்ள ஈஸ்டர் படுகொலை ஞாபகார்த்த தூபியில் இன்று காலை மட்டக்களப்பு மாநகரசபையின் ஏற்பாட்டில் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது

மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் சிவம் பாக்கியநாதன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதி முதல்வர் தி. டினேஸ் உட்பட மாநகரசபை உறுப்பினர்கள்,ஊடகவியலாளர்கள்,பொதுமக்கள் எனப் பெருமளவானோர் கலந்துகொண்டனர்

நினைவுத்தூபியில் மெழுகுவர்த்தி ஏற்றப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டதுடன் படுகொலை செய்யப்பட்டவர்களின் ஆத்மசாந்திக்கான பிரார்த்தனையும் மேற்கொள்ளப்பட்டது.

எஸ். வரதராஜன்