பாராளுமன்றம் அமைச்சர் குமார ஜயகொடி மீது நம்பிக்கை!

அமைச்சர் குமார ஜயகொடி மீது பாராளுமன்றம் நம்பிக்கை – எதிர்க் கட்சியின் பிரேரணை தோல்வி

எதிர்க்கட்சி உறுப்பினர்களால் வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடிக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை 104 மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டது.

இந்தப் பிரேரணைக்கு எதிராக 153 வாக்குகளும், ஆதரவாக 49 வாக்குகளும் அளிக்கப்பட்டன.

வலுசக்தி முகாமைத்துவம் தொடர்பாக அரசியலமைப்பின் மூலம் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைத் துஷ்பிரயோகம் செய்தமை மற்றும் கடமைகளைப் புறக்கணித்தமை ஆகிய குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், அமைச்சர் குமார ஜயகொடிக்கு எதிராக இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டு வந்ததாக எதிரக் கட்சி தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.