சினொபெக் நிறுவனம் நேற்று (06) நள்ளிரவு முதல் சுப்பர் டீசல் விலையை லீற்றருக்கு 28 ரூபாய் அதிகரித்துள்ளதாக அறிவித்துள்ளது.
அதற்கிணங்க 572 ரூபாயாகவிருந்த சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 600 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
92 ஒக்டேன் பெட்ரோல், ஒட்டோ டீசல் என்பன அரசாங்கம் அனுமதித்துள்ள விலைக்கே விற்கப்படுவதாகவும் சினோபெக் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
வி. அருள்செல்வன்
