வைத்தியர்களின் வேலை நிறுத்த போராட்டம் இடைநிறுத்தம்

அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட 24 மணித்தியால அடையாள பணிப்பகிஷ்கரிப்பு இன்று (01) காலை 8 மணியுடன் நிறைவடைந்தது.

இது தொடர்பான மேலதிக நடவடிக்கைகள் குறித்து, இன்று நடைபெறவுள்ள அவசர நிறைவேற்றுக்குழுக் கூட்டத்தின் பின்னரே தீர்மானிக்கப்படும் என அந்தச் சங்கத்தின் துணைச் செயலாளர் வைத்தியர் சமில் விஜேசிங்க தெரிவித்தார்.

மருத்துவர்களின் இடமாற்றங்கள் முறையாக நடைபெறவில்லை என்றும் இஃது அமைச்சருக்குப் புரியவில்லை என்றும் அவர் ஆதங்கம் தெரிவித்துள்ளார்.