அமெரிக்கப் படையினரை தீ வைத்துக் கொளுத்துவோம் - ஈரான்

ஈரானைத் தரைவழியாகத் தாக்க நினைத்தால், அமெரிக்கப் படையினரைத் தீவைத்துக் கொளுத்தப் போவதாக ஈரான் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஈரானுக்குள் தரைவழியாகத் தாக்குதலைத் தொடுப்பதற்குப் பென்டகன் ரகசியமாகத் திட்டம் தீட்டி வருவதை அறிந்திருப்பதாகவும் அவ்வாறு நடக்குமானால், அமெரிக்கப் படையினரைத் தீவைத்துத் துவம்சம் செய்வோம் என்று ஈரான் எச்சரித்திருப்பதாக டைம்ஸ் ஒப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.