அமெரிக்காவுடன் பேச்சு நடத்தவே இல்லை - ஈரான்

அமெரிக்காவுடன் ஈரான் பேச்சுவார்த்தை நடத்தியதாகக் கூறப்படுவதை ஈரான் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகாய் மறுத்துள்ளார்.

ஹோர்முஸ் நீரிணை குறித்த ஈரானின் நிலைப்பாட்டிலும், போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான நிபந்தனைகளிலும் எந்த மாற்றமும் இல்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.”

அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தை குறித்த தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை என ஈரான் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதன் மூலம் டிரம்ப் ஒரு பொய்யர் என்பது நிரூபணமாகியுள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளது.

உலகளாவிய எண்ணெய் போக்குவரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் இந்த நீரிணை மீதான தனது பிடியில் ஈரான் உறுதியாக உள்ளது.பிராந்திய மோதல்களை அல்லது போரை நிறுத்துவதற்கு ஈரான் ஏற்கனவே விதித்துள்ள நிபந்தனைகளில் எந்த சமரசமும் செய்யப்போவதில்லை என்பதை பாகாய் தெளிவுபடுத்தியுள்ளார்.