ஈரானின் தேசிய பாதுகாப்புச் சபை செயலாளர் கொல்லப்பட்டார்!

விமானப்படை மூலம் நடத்தப்பட்ட தாக்குதலில், ஈரானின் தேசிய பாதுகாப்புச் சபை செயலாளர் அலி லரிஜானியும் உயிரிழந்துவிட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

ஈரானை வழிநடத்துவதில் தேசிய பாதுகாப்பு சபை செயலாளராக இருக்கும் அலி லரிஜானி முக்கியமான நபராக பார்க்கப்படுகிறார். அமெரிக்கா உடன் அணுசக்தி பேச்சுவார்த்தை நடத்திய குழுவில் இவரும் இருந்தார்.

இந்நிலையில், லரிஜானியை குறிவைத்து இஸ்ரேல் விமானப்படை மூலம் தாக்குதல் நடத்தியுள்ளது. அதில் அவர் உயிரிழந்துவிட்டதாக இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.