தொடர்ச்சியான அரச சேவையை உறுதிப்படுத்துவதற்காகவே புதன்கிழமை விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய தினங்களில் தொடர்ச்சியாக விடுமுறை வழங்கும் போது, அலுவலகப் பணிகள் பல நாள்களுக்குப் பாதிக்கப்படுகின்றன.
எனவே, விடுமுறையை புதன்கிழமைக்கு மாற்றுவதன் மூலம், நீண்டகாலத் தடங்கல் இன்றி அரச சேவைகளை முன்னெடுக்க முடியும்.
அரச அலுவலகங்களை முற்றாக மூடாமல், பொதுச் சேவைகளைப் பராமரிப்பதற்கும் வாரம் முழுவதும் அத்தியாவசியப் பணிகள் இயங்குவதை உறுதி செய்வதற்கும் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
