ஈஸ்டர் தாக்குதலின் உண்மையான சூத்திரதாரியை எதிர்வரும் மார்ச் 31 ஆம் திகதி நாட்டுக்கு அம்பலப்படுத்தப்போவதாகப் பிவிதுரு ஹெல உருமய கட்சியின் தலைவர் – சட்டத்தரணி உதய கம்மன்பில தெரிவிக்கின்றார்.
தாக்குதல் நடந்து ஏழு ஆண்டுகள் கடந்தும் அதனை இன்னும் விற்றுப் பிழைத்துக்கொண்டிருக்கிறார்கள் என்று குற்றம் சாட்டிய திரு. கம்மன்பில,
எந்தலித அடிப்படையும் இல்லாமல் படையினர் மீது களங்கம் கற்பிக்கப்பட்டிருப்பதாகவும் அதனைத் துடைத்தெறிய காலம் கனிந்திருப்பதாகவும் இன்று (16) கொழும்பில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
நீண்ட ஆய்வுகள் மூலம் உண்மை கண்டறியப்பட்டுள்ளதாகவும் அதனைத் தொகுத்து ஒரு நூலாக வெளியிட்டிருப்பதாகவும் குறிப்பிட்ட அவர், அந்த நூல் மார்ச் 31 இல் வெளிவருகிறதென்றும் தெரிவித்தார்.
வி. அருள்செல்வன்
