யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவர ஈரான் மூன்று நிபந்தனைகள்

யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவர ஈரானிய ஜனாதிபதி மசூட் பெசஷ்கியன் மூன்று நிபந்தனைகளை முன்வைத்துள்ளார்.

ஈரானின் சட்டபூர்வ நிர்வாகத்தின் இறைமையை சர்வதேச மட்டத்தில் உறுதிப்படுத்த வேண்டும்.

ஏற்பட்டுள்ள அழிவுகளுக்கு நியாயமான நட்டஈடு வழங்கப்பட வேண்டும்.

எதிர்காலத்தில் இவ்வாறான ஆக்கிரமிப்போ தாக்குதலோ நடக்காதென்பதை சர்வதேச சமூகம் உத்தரவாதப்படுத்த வேண்டும்.

இந்த மூன்று நிபந்தனைகள் குறித்து சர்வதேச சமூகம் கவனம் செலுத்த வேண்டும் என்று ஈரான் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.