நோர்வே பிரதி வெளிவிவகார அமைச்சர் - சஜித் சந்திப்பு

எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, நோர்வே பிரதி வெளிவிவகார அமைச்சர் Andreas Motzfeldt Kravik ஆகியோருக்கிடையேயான விசேட சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது. அப்போது இலங்கைக்கும் நோர்வேக்கும் இடையிலான இருதரப்பு உறவை மேம்படுத்துவதற்கான தொலைநோக்கு மூலோபாயத் திட்டத்தை திரு. பிரேமதாச முன்வைத்தார்.