நாட்டில் குடும்பக் கட்டமைப்பு நாளுக்குநாள் சீர்குலைந்து வருவதாகக் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை கவலை தெரிவித்துள்ளார்.
திருமண பந்தம் சீர்குலைவது நாளுக்கு நாள் வியாபித்து வருவது ஆரோக்கியமானது அல்லவென்றும் அவர் தெரிவித்துள்ளார்.
களுத்துறை லுர்து மாதா தேவாலயத்தின் 117 ஆவது வருடாந்த உற்சவத்தில் கலந்துகொண்டு கர்தினால் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார்.
குடும்பக் கட்டமைப்பு வலுப்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் சொன்னார்.
