இ. போ. ச பஸ்களில் மீண்டும் பெண் நடத்துநர்கள் நியமனம்

சுமார் 45 ஆண்டுகளுக்குப் பின்னர் இலங்கை போக்குவரத்து சபையால் இன்று (6) பெண்கள் நடத்துநர்களாக ஆட்சேர்ப்பு செய்யப்பட்டனர்.

இலங்கை போக்குவரத்து சபைக்கு புதிதாக ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட 20 பெண் நடத்துநர்கள் நியமனம் இன்று மாக்கும்புர பன்முக போக்குவரத்து மையத்தில் நடைபெற்றது.

இதில் ஊடகத்துறை பிரதி அமைச்சர் கௌசல்யா அரியரத்ன, நாடாளுமன்ற உறுப்பினர் சமன்மலி குணசிங்க, இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் சஜீவ கனகரட்ன ஆகியோர் கலந்து கொண்டனர்.

நியமிக்கப்பட்ட பெண் நடத்துனர்களுக்கு புதிய சீருடை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இலங்கையில் இதற்கு முன்பு 1980 களின் ஆரம்பத்தில் பெண் நடத்துநர்கள் கொழும்பு நகர பஸ்களில் கடமையாற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது.