மட்டக்களப்பு பாடசாலைகளில் டெங்கு பரிசோதனை

சுகாதார அமைச்சினால் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள சகல அரசாங்க பாடசாலைகளிலும் இன்று டெங்கு பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது.

வளமான நாடு அழகான வாழக்கையும் தூய்மையான நகரம் ஆரோக்கியமான வாழ்க்கை திட்டத்தின் ஒரு கட்டமாக அரசாங்கத்தின் கிளீனிங் ஸ்ரீலங்கா திட்டத்தின் கீழ் இன்று மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள சகல பாடசாலைகளிலும் அரசாங்கத்தின் தேசிய டெங்கு ஒழிப்பு வேலை திட்டத்தின் கீழ் டெங்கு ஒழிப்பு பரிசோதனை நடவடிக்கை இன்று காலை முன்னெடுக்க பெற்றது.

இந்த டெங்கு ஒழிப்பு நடவடிக்கையானது மட்டக்களப்பு மாநகர சபை பிராந்திய சுகாதாரத் திணைக்களம் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் ஆகியன இணைந்து முன்னெடுத்தன.

மட்டக்களப்பு வலய கல்வி அலுவகதிக்கு உட்பட்ட சகல தேசிய பாடசாலைகள் உட்பட அனைத்து பாடசாலைகளிலும் இன்று காலை டெங்கு பரிசோதனை இடம் பெற்றது.

டெங்கு குடம்பிகள் காணப்படும் இடங்கள் பரிசோதிக்கப்பட்டு சூழலை சுத்தமாக வைத்திருக்குமாறும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.

மட்டக்களப்பு வரதன்