கிழக்கு மாகாணத்தில் தொடர்ச்சியான கடல் சீற்றம், பலத்த காற்று அடை மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
வங்காள விரிகுடா கடற்பரப்பில் நிலை கொண்டுள்ள தாழமுக்கம் ஆழமான தாழமுக்கமாக மேலும் வலுவடைவதற்கான சாத்தியம் காரணமாக கிழக்கு மாகாணத்தில் நேற்றைய தினத்திலிருந்து தொடர்ச்சியான மழைவீழ்ச்சி கிடைக்கப்பெற்று வருகின்றது
இதேவேளை மட்டக்களப்பு மாவட்டத்திலும் தொடர்ச்சியாக மழை பெய்து வருவதனால் தாழ்நிலைப்பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
இதேவேளை மட்டக்களப்பு மாவட்டத்தில் கடலை அண்டிய பிரதேசங்களில் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப் பட்டுள்ளதுடன் கடல் கொந்தளிப்பு காரணமாக அவர்கள் தங்களது வாழ்வாதார பொரு. பாதுகாப்பான இடத்திற்கு நகர்த்துவதை காண முடிகின்றது
கடலானது பலத்த இரைச்சலுடன் கொந்தளிப்புடன் காணப்படுகின்றதனால் மாவட்டத்தில் தொடர்ச்சியாக பலத்த காற்று வீசி வருகின்றது.
மட்டக்களப்பு வரதன்




