கல்முனைப் பிராந்தியத்தில் டெங்குத் தாக்கம் அதிகரித்து வருகின்ற சூழ்நிலையில் கல்முனை மாநகர சபையினால் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதன் ஓர் அங்கமாக கல்முனை மாநகர ஆணையாளர் ஏ.ரி.எம். றாபியின் ஆலோசனை, வழிகாட்டலில் மருதமுனை பிரதேசத்தில் இன்று புதன்கிழமை (07) இந்த நடவடிக்கை வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது டெங்கு பரவும் இடங்கள் அடையாளம் காணப்பட்டு, சுத்தம் செய்யப்பட்டதுடன் கொல்கலன்களும் குப்பைகளும் சேகரித்து அகற்றப்பட்டுள்ளன. அத்துடன் பொதுச் சுகாதார பரிசோதகர்களினால் வீடுகளில் டெங்கு பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது.
இதற்கு கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையும் ஒத்துழைப்பு வழங்கியிருந்தது.
அடுத்தடுத்த நாட்களில் ஏனைய பிரதேசங்களிலும் பாடசாலைகள் மற்றும் அரச அலுவலகங்களிலும் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக கல்முனை மாநகர ஆணையாளர் ஏ.ரி.எம். றாபி தெரிவித்தார்.
சா. நடனசபேசன்

