அரசாங்கத்தின் மீது வெளி நாடுகள் கொண்டுள்ள நம்பிக்கையின் காரணமாகவே பாதிக்கப்பட்ட மக்களுக்காக அதிகமான நிவாரண பொருட்களை வழங்கி வைக்க கூடியதாக உள்ளது என்று பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு தெரிவித்தார்.
கடந்த கால அரசாங்கங்கள் அனர்த்த காலங்களில் கிடைக்கப்பெற்ற நிவாரண பொருட்களை மிகத் தாமதமாகவே பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கி வந்தன.
ஆனால் தற்போதுள்ள அரசாங்கம் அரச ஊழியர்களின் அர்ப்பணிப்பான சேவையின் மூலம் துரிதமாக அவற்றை பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கி வருகின்றது எனவும் திரு. பிரபு தெரிவித்தார்.
மாலத்தீவு அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட நிவாரண பொருட்களின் ஒரு தொகுதி நேரடியாகவே பாதிக்கப்பட்ட மக்களுக்காக ஏராவூர் பற்று செங்கலடி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மக்களுக்காக வழங்கி வைக்கப்பட்டது.
அவற்றை அதிகம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கி வகையில் அப்பகுதி கிராம சேவையாளரிடம் கையளிக்கும் நிகழ்வு இன்று செங்கலடி பிரதேச செயலாளர் எஸ் தனபால் தலைமையில் இடம்பெற்றது
இதன்போது 10 லட்சம் ரூபா பெறுமதியான மீன் டின்கள் சமையல் உபகரணங்கள் என்பன பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபுவினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகம் பாதிக்கப்பட்ட தன்னாமுனை மைலம்பாவெளி குமாரவெளி ஆகிய கிராமம் பகுதிகளுக்குரிய கிராம சேவர்களிடம் கையளிக்கப்பட்டது
இந்த நிகழ்வில் இப்பிரதேச செயலக பிரதி திட்டமிடல் பணிப்பாளர் ஆறுமுகம் சுதாகரன் மற்றும் அரச உயர் அதிகாரிகள் தேசிய மக்கள் சக்தியின் இப்பிரதேச உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்
மட்டக்களப்பு வரதன்



