பெரும்பாலான பகுதிகளில் பலத்த மழை

ஊவா மாகாணத்திலும் அம்பாறை, மட்டக்களப்பு, மாத்தளை, நுவரெலியா மாவட்டங்களிலும் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. 

காலி, மாத்தறை, களுத்துறை, இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

இந்தப் பிரதேசங்களில் சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. 

சப்பிரகமுவ, மத்திய மாகாணங்களிலும் களுத்துறை, பதுளை, காலி, மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.