பாதிக்கப்பட்ட மக்களுக்கு தொடர்ச்சியாக உதவிக்கரம் நீட்டும் ROYAL DIAMOND GROUP-UAE..!
அனர்த்தங்கள் நேர்ந்த வேளைகளில் உடனுக்குடன் உதவி செய்யும் ZAHRA FOUNDATION தற்போது ROYAL DIAMOND GROUP-UAE என்ற பெயரில் தற்போது ஏற்பட்ட அனர்த்தத்தின்போதும் நாடளாவிய ரீதியில் தன்னுடைய கரங்களை விரித்து மனிதாபிமானச் சேவையில் ஈடுபட்டு வருகிறது.
சில்மியாபுர, கம்பளை, மல்வானை, மூதூர், கிண்ணியா உள்ளிட்ட பல பகுதிகளுக்கு இந்த அமைப்பின் தலைவரான கலாநிதி அல்ஹாஜ் பழ்ல் ஜிப்ரி அவர்கள் தேவையான நிவாரண உதவிகளை வழங்கினார்.
அல்ஹம்துலில்லாஹ், நெருக்கடியின் நேரத்தில் மனிதநேயம் மீண்டும் வெற்றி பெற்றது.
✍️ எஸ். சினீஸ் கான்
