மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட உட்கட்டமைப்பு தொடர்பான தரவுகள் கிடைக்கப்பெற்றள்ளன.
மாவட்டத்தில் 14 பிரதேச செயலாளர் பிரிவுகளில் உள்ள 345 கிராம சேவகர் பிரிவுகளில் 324 கிராம சேவையாளர் பிரிவுகள் வெள்ள நீரினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைக்கப் பெற்றுள்ளன.
வெள்ள அனர்த்தத்தினால் 547வீதிகளும், குளம் ஒன்றும், 24 பாலங்களும், 42 கல்வெட்டுகள் (ஊயடஎநசவள) பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சில பிரதேசங்களுக்கான போக்குவரத்து தடைப்பட்டு நீர் தேங்கியிருப்பதனால் மேலும் சேத விபரங்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
சா.நடனசபேசன் மட்டக்களப்பு
