கண்டி மண்சரியில் இருவர் பலி; மீட்கச் சென்ற பலர் மாயம்!

கண்டி பேராதனை அப்லண்ட் பகுதியில் இடம்பெற்ற மண சரிவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் பலியாகியுள்ளனர்.

இவர்களை மீட்கச் சென்ற இளைஞர்கள் பலர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அப்பிரதேசத்திற்கான போக்குவரத்து முற்றாக நாலா புறமும் துண்டிக்கப்பட்டுள்ளதோடு தொலைத் தொடர்புகளும் மின்னிணைப்புகளும் முற்றாக செயலிழந்துள்ளன.

தொடர்புகள் முழுதும் அற்ற நிலையில் உறவினர்கள் பெரிதும் அல்லலுருவணைக் காண முடிகிறது.

பன்விலை நிருபர் ம. நவநீதன்