குருநாகல் மண்சரிவில் ஐவர் உயிரிழப்பு

குருநாகல் மாவட்டத்தில் குருஸ்ஸ பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளதோடு 3 பேர் காணாமல் போயுள்ளனர். மேலும் 10 பேர் தொடர்பில் எதுவித தகவலும் வெளியாகவில்லை.

அதே மாவட்டத்தில் இப்பாகமுவ பகுதியில் ஏற்பட்ட மற்றுமொரு மண்சரிவில் 10 பேர் காணாமல் போயுள்ளதாக குருநாகல் மாவட்டச் செயலகம் தெரிவித்துள்ளது.