WhatsApp Image 2025-11-28 at 13.58.10

கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழை காரணமாக இரத்தினபுரி மாவட்டத்திலுள்ள இரத்தினபுரி நகரம் உள்ளிட்ட பெரும் பகுதி வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளது.

இரத்தினபுரி நகரத்திற்கண்மையிலுள்ள களுகங்கையின் நீர் மட்டம் 24 அடிக்கு மேல் உயர்ந்து காணப்படுகிறது

இதனால் இரத்தினபுரி நகரத்தின் பெரும் பகுதி நீரில் மூழ்கியுள்ளது.

இரத்தினபுரி அல்மக்கியா முஸ்லிம் மகா வித்தியாலயம், இரத்தினபுரி சிவாலயம் அதற்கு அண்மையிலுள்ள பௌத்த விகாரை உள்ளிட்ட கடைகள், வர்த்தக நிலையங்கள் என்பனவும் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் பெரும் பொருட் சேதங்கள் ஏற்பட்டுள்ளன.

இரத்தினபுரி, எலபாத்த,பெல்மதுளை, காவத்தை,எஹேலியகொடை, காவத்தை,கிரியெல்ல குருவிட்ட உள்ளிட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக சுமார் ஆயிரம் குடும்பங்களுக்கு மேல் பாதிக்கப்பட்டுள்ளன.

இதேவேளை இம்மாவட்டத்தில் ஆங்காங்கே மண்சரிவுகளும். ஏற்பட்டுள்ளன.இறக்குவானை இரத்தினபுரி பிரதான வீதியில் மாதம்ப விநாயகர் ஆலயத்திற்கு அருகில் பாரிய மண்சரிவு ஏற்பட்டுள்ளது.. இதனால் இப்பாதை முற்றாக துண்டிக்கப்பட்டது

கொழும்பு இரத்தினபுரி பிரதான பாதையில் புவக்பிட்டிய பக்தியில் வெள்ள..அபாயம்.எற்பட்டுள்ளது

இம்மாவட்டத்தில் வெள்ளம் மற்றும் மண்சரிவினால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் அருகிலுள்ள பாடசாலைஙள்,மதஸ்தானங்கள் என்பனவற்றில் தற்காலிக மாக தங்க வைக்கப்பட்டுள்ளன.

இந்த இடரனத்தம் காரணமாக இரத்தினபுரி மாவட்டத்திலுள்ள பெரும்பாலான பகுதிகளில் மின் துண்டிக்கப்பட்டுள்ளது

இரத்தினபுரி நிருபர் எஸ். ஆர். இரவீந்திரன்