வடக்கு, கிழக்கில் மழை நீடிக்கும்

வடக்கு, வடமத்திய, கிழக்கு மாகாணங்களில் இடைக்கிடையே மழை பெய்யும் சாத்தியம் நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் கூறியுள்ளது. 

மேல், சப்பிரகமுவை, தென், ஊவா மாகாணங்களிலும், நுவரெலியா மாவட்டத்திலும் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. 

சப்பிரகமுவை, மத்திய, ஊவா மற்றும் தென் மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் மூடுபனி நிலவக்கூடும்.