கொட்டகலை பிரதேச சபையின் நவம்பர் மாதத்திற்கான மாதாந்த சபைக்கூட்டமானது கொட்டகலை பிரதேச சபையின் தலைவர் இராஜமணி பிரசாந்த்தின் தலைமையில், கூட்ட மண்டபத்தில் இன்று (11) இடம்பெற்றது,
இக்கூட்டத்தில் கொட்டகலை பிரதேச சபையின் உப தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பங்கேற்றிருந்தனர்.
இச்சபைக்கூட்டத்திலே கொட்டகலை பிரதேச சபையின் 09 ஆவது வரவு செலவுத் திட்டமான 2026 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்டம் மற்றும் செயற்பாட்டுத் திட்டங்கள் முன்வைக்கப்பட்டு சபையினால் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
மேலும் கொட்டகலை பிரதேச சபைக்குற்பட்ட பிரதேசத்தில் காணப்படும் பிரச்சினைகள் மற்றும் அவற்றுக்கான தீர்வுகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
மஸகெலியா நிருபர் செ. தி. பெருமாள்

