பாகிஸ்தான் கார் குண்டுத் தாக்குதலில் 12பேர் பலி

பாகிஸ்தானில் இடம்பெற்ற கார் குண்டு தற்கொலைத் தாக்குதலில் 12 பேர் பலியாகியுள்ளனர்.

பாகிஸ்தானின் தலைநகர் இஸ்லாமாபாத்தில் இந்தத் தற்கொலைக் குண்டுத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

நகரில் உள்ள நீதிமன்றக் கட்டடம் ஒன்றுக்கு முன்பாக இந்தத் தாக்குதல் சம்பவம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்தத் தாக்குதலில் குறைந்தபட்சம் 12 பேர் உயிரிழந்ததுடன் சுமார் 21 பேர் காயமடைந்துள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.