வடக்கு, கிழக்கில் மழை நீடிக்கும்

மேற்கு, சப்பிரகமுவை, மத்திய, வடமேற்கு மாகாணங்களில் பல தடவை மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் கூறியுள்ளது. 

வட மாகாணம், அனுராதபுரம் மாவட்டத்தில் சில நேரங்களில் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் வௌியிட்டுள்ள வானிலை முன்னறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மத்திய மலைகளின் மேற்கு சரிவுகளிலும், மேற்கு, சப்பிரகமுவ, மத்திய, தெற்கு, வடக்கு, வடமத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும், திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் அவ்வப்போது மணிக்கு (50-60) கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். 

பலத்த காற்றினால் ஏற்படும் சேதங்களைக் குறைக்க போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.