அடுத்த 48 மணித்தியாலத்திற்கு வெள்ள அபாய எச்சரிக்கை

அடுத்த 48 மணித்தியாலத்திற்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

களு கங்கையின் நீரேந்து பகுதிகளை அண்மித்த சில பிரதேசங்களில் அடுத்த 48 மணித்தியாலங்களில் சிறிய வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

களுகங்கயைின் கிளை ஆறான குடா கங்கையின் மேல் நீரேந்து பகுதிகளில் குறிப்பிடத்தக்க மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதன் காரணமாக, களுகங்கையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்துள்ளதாக திணைக்களம் அறிக்கை வெளியிட்டுள்ளது. 

இதன்படி, அடுத்த 48 மணித்தியாலங்களுக்குள் புளத்சிங்கள , மதுராவல மற்றும் பாலிந்தநுவர பிரதேச செயலாளர் பிரிவுகளில் குடா ஆறு, மகுர ஆறு மற்றும் அவற்றின் வெள்ள சமவெளியில் உள்ள தாழ்நிலப் பகுதிகளில் சிறிய வெள்ளப்பெருக்கு ஏற்படலாம் என அத்திணைக்களம் எச்சரித்துள்ளது. 

இதன் காரணமாக, குடா கங்கை மற்றும் மகுர கங்கையை அண்மித்த தாழ்வான பகுதிகள் ஊடாக செல்லும் குறுக்கு வீதிகள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் காணப்படுவதாகவும், இந்த நிலைமை குறித்து மிகுந்த அவதானத்துடன் செயல்படுமாறும் நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவித்துள்ளது. 

இந்தப் பிரதேசங்களில் வசிக்கும் பொதுமக்களும், அந்தப் பிரதேசங்கள் ஊடாக பயணிக்கும் வாகன ஓட்டுநர்களும் மிக விழிப்புடன் இருக்குமாறும் அத்திணைக்களம் கோரிக்கை விடுத்துள்ளது.

இரத்தினபுரி மாவட்டத்தில் வெள்ள அபாயம்!

இரத்தினபுரி மாவட்டத்தில் பெய்து வரும் அடை மழை காரணமாக இரத்தினபுரி நகரில் அமைந்துள்ள களுகங்கையின் நீர் மட்டம் இன்று (25 சனிக்கிழமை)18 அடி வரை உயர் ந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து அடை மழை பெய்யும் பட்சத்தில் களுகங்கையின் நீர் மட்டம் அதிகரித்து வெள்ளம் ஏற்படும் அபாயம் காணப்படுகின்றது. என்று நீர் பாசன திணைக்களம் தகவல் வெளியிட்டுள்ளது.

எனவே இந்த களுகங்கையை அண்டிய பகுதிகளில் வசிக்கும் மக்கள் அவதானமாக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

இதேவேளை இந்த அடை மழை காரணமாக இரத்தினபுரி எலபாத்த பிரதேச செயலகப் பிரிவிலுள்ள சில தாழ் நிலங்கள் மழை நீரினால் நிரம்பி காணப்படுகின்றன.

இம்மாவட்டத்தின் பல பகுதிகளில் பலத்த மழை பெய்து வருவதால் மண்சரிவு அபாயம் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

எனவே மண்சரிவு அபாயம் குள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்கும் படி கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்

இதேவேளை. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சபரகமுவ மாகாண பாடசாலைக்கு தீபாவளி தினத்திற்கு மறுதினம் விடுமுறை வழங்கப்பட்டது .

அதற்குப் பதிலாக நேற்று சனிக்கிழமை பாடசாலை நடை பெற்ற போதிலும் மழை காரணமாக மாணவர்களின் வரவு மிகவும் குறைவாக காணப்பட்டது.

இரத்தினபுரி மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்யும் சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக வளிமண்டல திணைக்களம் அறிவித்துள்ளது..