இன்று 100 மில்லி மீற்றருக்கும் அதிக மழை வீழ்ச்சி ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் பல பகுதிகளில் இன்று 100 மில்லிமீற்றருக்கும் அதிக அளவில் பலத்த மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் கூறியுள்ளது.
மேல், சப்பிரகமுவை, மத்திய, ஊவா, வடமேல் தென் மாகாணங்களின் சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிக பலத்த மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதேநேரம் மேல், சப்பிரரகமுவை, தென் மாகாணங்களிலும் நுவரெலியா மாவட்டத்திலும் இடைக்கிடையே இடியுடன் கூடிய மழை பதிவாகும்.
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழையுடனான காலநிலை நிலவும் எனவும் அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
