நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று பிற்பகல் 1.00 மணிக்குப் பிறகு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் கூறியுள்ளது.
மேல், சப்ரபிரகமுவை, மத்திய, ஊவா, வடமத்திய, வடமேல் மாகாணங்களின் சில இடங்களில் 75 மி.மீற்றருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும்.
மேல், தென் மாகாணங்களில் காலை வேளைகளில் மழை பெய்யக்கூடும்.
இடியுடன் கூடிய மழையுடன் ஏற்படக்கூடிய தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கத்தினால் ஏற்படும் ஆபத்துகளைக் குறைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு திணைக்களம், பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.
