வடக்கு, கிழக்கில் மழை நீடிக்கும்

இன்று முதல் மழை அதிகரிக்கும் வாய்ப்பு இருப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

.நாட்டைச் சூழவுள்ள பகுதிகளில் இன்று முதல் அடுத்து வரும் நாட்களில் வளிமண்டலத் தளம்பல் நிலைகள் விருத்தியடையக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழையோ இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா, வடமேல் ஆகிய மாகாணங்களிலும் அம்பாறை மாவட்டத்திலும் சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

மேல், தென், வட மாகாணங்களிலும் காலை வேளையிலும் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மத்திய, சப்பிரகமுவை, ஊவா மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.