ஐமச இல்லாத எதிர்க்கட்சிக் கூட்டணி?

மாகாண சபைக்காக பாராளுமன்றம் துறக்கும் ஐக்கிய மக்கள் சக்தியினர் பற்றி எதிர்க் கட்சித் தலைவர் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் தற்போதைய சில பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் பாராளுமன்ற உறுப்பினர் பதவிகளை இராஜினாமா செய்து, எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் பிரதான வேட்பாளர்களாக போட்டியிடத் தயாராக உள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். 

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமை செயலகத்தில் டி.எஸ். சேனநாயக்க அரசியல் கற்கைகள் பீடத்தின் திறப்பு விழா, எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாசவின் பங்கேற்புடன் நேற்று (11) இடம்பெற்றது. 

அப்போது கலந்து கொண்டு உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர், 

இந்தத் தியாகங்களைச் செய்து மாகாண சபைத் தேர்தலில் கட்சியை வெற்றி பெறச் செய்ய அவர்கள் தயாராக இருப்பதாகக் கூறியுள்ளார். 

ஆளும் தரப்பு உறுப்பினர்கள் இதற்கு முன்பு இதுபோன்ற செயல்களைச் செய்திருந்தாலும், எதிர்க்கட்சியிலிருந்து இதுபோன்ற ஒன்று நடப்பது அரிதான விடயம் என்றும் குறிப்பிட்ட அவர்,

மாகாண சபைக்காக பாராளுமன்றம் துறக்கும் ஐக்கிய மக்கள் சக்தியினர் பற்றி எதிர்க் கட்சித் தலைவர் பெருமிதம் தெரிவித்துள்ளார்.