தமிழ் மொழித்தினப் போட்டியில் 5 இடங்கள்

அகில இலங்கை ரீதியான தமிழ் மொழித் தினப் போட்டியில் மத்திய மாகாண வத்தேகம கல்வி வலயம் 5 இடங்களை தனதாக்கிக் கொண்டுள்ளது.

வத்தேகம கல்வி வலயத்திற்குட்பட்ட மடுல்கலை க/வத்/பரமேஸ்வரா தமிழ் வித்தியாலய மாணவி A. யேக்ஷிகா பிரிவு 3 பேச்சுப் போட்டியில் முதலாம் இடத்தினை பெற்று தங்கப்பதக்கத்தை வென்றுள்ளார்.

அதே நேரம் மமா/க/வத்/இரஜவலை இந்து தேசிய கல்லூரியில்
பிரிவு 4 தனி இசைப் போட்டியில் G.அனிஷ்கா முதலாமிடம் பெற்று தங்கப்பதக்கத்தையும் பெற்றார்.

பிரிவு 5 பேச்சுப் போட்டியில் T.டிலுக்ஷனா மூன்றாம் இடத்தைப் பெற்று வெண்கலப் பதக்கத்தினையும் பிரிவு 1 குழு நடனப்போட்டியில் மூன்றாமிடத்தைப் பெற்று வெண்கலப் பதக்கத்தையும் பிரிவு 1 குழு இசைப் போட்டியில் மூன்றாமிடத்தினைப் பெற்று வெண்கலப்பதக்கத்தினையும் பெற்றுக் கொண்டுள்ளனர்.

பன்விலை ம. நவநீதன்