கரூரில் உயிரிழந்தோருக்கு முதலமைச்சர் அஞ்சலி

கரூரில் உயிரிழந்தோருக்கு முதலமைச்சர் அஞ்சலி செலுத்தியுள்ளார்.

கரூர் மாவட்ட அரச தலைமை வைத்தியசாலைக்கு தமிழக முதலமைச்சர் மு.க . ஸ்டாலின் வருகை தந்துள்ளார்.

தமிழ்நாடு – கரூரில் நேற்று (27) தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜயின் பிரசார கூட்டத்தின்போது திடீரென கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த கூட்ட நெரிசலில் சிக்கி 10 குழந்தைகள், 17 பெண்கள், 12 ஆண்கள் என மொத்தம் 39 பேர் உயிரிழந்தனர்.

இந்த நிலையில், சென்னையில் இருந்து தனிவிமானம் மூலம் திருச்சி வந்த முதலமைச்சர்  ஸ்டாலின், கரூர் மாவட்ட அரச தலைமை  வைத்தியசாலைக்கு வருகை தந்துள்ளார்.

இதேவேளை முதலமைச்சர் உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தியதையடுத்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.

தொடர்ந்து, வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வரும் அனைவரையும் சந்தித்து நலம் விசாரித்தார்.

இதையடுத்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சையை பணியில் இருக்கும்  வைத்தியர்களிடம் முதலமைச்சர் கேட்டறிந்தார்.