நிபந்தனையின்றி விடுதலையாக ஆலயங்களில் விசேட பூஜை!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நிபந்தனையின்றி விடுதலையாக ஆலயங்களில் விசேட பூஜை வழிபாடுகளை நடத்த மஸ்கெலியா பகுதி தோட்டங்களில் ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

நாளை காலை 9.00 மணிக்கு விஷேட பூசையும் பிரார்த்தனையும் நடைபெறும்.

மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள அனைத்து பெருந் தோட்ட தொழிலாளர்கள் தங்கள் வசிக்கும் தோட்ட ஆலயங்களில், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சுகம் பெற்று வீடு திரும்ப வேண்டும் எனவும் அவர் உடன் விடுதலையாகி வீடு திரும்ப வேண்டும் எனவும் விசேட பூசைகள் நடத்த ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

நாடு வங்குரோத்து அடைந்த வேளையில் நாட்டையும் நாட்டு மக்களையும் காப்பாற்றிய தனி ஒரு நபர் ரணில் விக்கிரமசிங்க ஆவார்.

அவர் எந்த ஒரு நிபந்தனையும் இன்றி விடுதலை செய்ய பட வேண்டும் எனவும் அவர் உடல் நிலை தேறி வைத்திய சாலையில் இருந்து வெளியேறி செல்ல பிரார்த்தனை செய்ய ஏற்பாடு செய்வதாகப் பொதுமக்கள் தெரிவித்தனர்.

மஸ்கெலியா நிருபர் செ. தி. பெருமாள்