கல்வி நிருவாக சேவைப்பரீட்சையில் சித்தி

குருமண்வெளியைப் பிறப்பிடமாகவும் துறைநீலாவணையை வதிவிடமாகவும் கொண்ட சோமசுந்தரம் செல்வம் அதிபர் இலங்கை கல்வி நிருவாக சேவைப்பரீட்சையில் சித்தி அடைந்துள்ளார்.

இவர் ஆரம்பக்கல்வியினை குருமண்வெளி சிவசக்தி மகாவித்தியாலயத்திலும் உயர்தரத்தினைப் பட்டிருப்புத் தேசியபாடசாலையிலும் கற்று கல்விக்கல்லூரிக்குத் தெரிவுசெய்யப்பட்டார்.

ஆசிரியராக முதல் நியமனம் 2003.07.03 திகதி விவிலை தமிழ் கனிஷ்ரவித்தியாலயத்தில் பெற்றார்.

பின்னர் துறைநீலாவணை மகாவித்தியாலயத்தில் ஆசிரியராகவும் அதனைத்தொடர்ந்து அதிபர் சேவையில் சித்தியடைந்து துறைநீலாவணை மகாவித்தியாலயத்தில் பிரதி அதிபராக நியமிக்கப்பட்டார்.

தொடர்ந்து சித்திவிநாயகர் வித்தியாலயம், குருமண்வெளி சிவசக்தி மகாவித்தியாலயம் ஆகியவற்றில் அதிபராக கடமையாற்றினார்.

இந்த நிலையில் கல்வி நிருவாக சேவைக்குத் தெரிவாகியுள்ளார். இவர் கலைப்பட்டதாரி, முதுமாணி, கல்வி முதுமாணி ,பட்டப்பின் கல்வி டிப்ளோமா ஆகிய பட்டங்களைப் பெற்றுள்ளார்.

தமிழ் உரைநடை ஒளி – காமராஜர் பல்கலைக்கழகம், இந்தியா

16 ஆவது அகில உலகத் தமிழ் உரைநடை ஆராய்ச்சி மகாநாட்டில் கலந்துகொண்டு உரை நடைகளுக்கெல்லாம் அடிநாதவமாக அமைந்தவர் ஆறுமுக நாவலர் என்ற ஆய்வுக் கட்டுரையை சமர்ப்பித்தார்.

அதனால், தமிழ் உரைநடை ஒளி எனும் கௌரவப்பட்டம் பெற்றார.

கல்வி நிருவாக சேவைப்பரீட்சையில் சித்தி பெற்று நிருவாக சேவைக்கு உள்வாங்கப்பட்டுக் குருமண்வெளி மண்ணுக்குப் பெருமை சேர்த்துள்ளார்.