ஓய்வுபெற்ற ஆசிரியை கமால் சுல்பிகா பாராட்டு விழா வேப்பையடி கலைமகள் மகா வித்தியாலயத்தின் ஏற்பாட்டில் அதிபர் கே. தியாகராசா தலைமையில் நடைபெற்றது.
சம்மாந்துறை கல்வி வலயத்திற்குட்பட்ட வேப்பையடி கலைமகள் மகா வித்தியாலயத்தில் சிங்களப்பாட ஆசிரியையாகக் கடமையாற்றி 34 வருட சேவையில் இருந்து திருமதி எஸ்.எம்.கமால் சுல்பிகா ஓய்வுபெற்றார்.
இவர் தனது ஆரம்பக்கல்வியை கல்முனை சிங்கள மகா வித்தியாலயத்திலும் உயர்தரத்தினை அம்பாரை பண்டாரநாயக்க மகளிர் மகா வித்தியாலயத்திலும் கற்றார்.
1992.05.11 ஆம் திகதி ஆசிரியராகக் கல்முனை சிங்கள மகா வித்தியாலயத்தில் முதல் நியமனத்தினைப்பெற்றார்.
பின்னர் நற்பட்டிமுனை அல் அக்ஷாவித்தியாலயம், கல்முனை உவெஸ்லி உயர்தரப்பாடசாலை, இறுதியாக வேப்பையடி கலைமகள் மகா வித்தியாலயம் ஆகியவற்றில் கற்பித்து ஓய்வுபெற்றுள்ளார்.
இவர் சுமார் 10 வருடங்கள் அட்டாளைச்சேனை தேசியக் கல்வியியற்கல்லூரியில் வருகைதரு விரிவுரையாளராகக் கடமையாற்றியமையும் குறிப்பிடத்தக்கது.
ஆசிரியை கமால் சுல்பிகா பாராட்டு விழா ஏற்பாடுகளை வேப்பையடி கலைமகள் மகா வித்தியாலகம் மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தது.




மட்டக்களப்பு சா. நடனசபேசன்

