பல்துறையாளர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா

விவேகானந்த மனிதவள மேம்பாட்டு நிலையத்தில் பயிற்சி பெற்ற 158 பல்துறையாளர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா மட்டக்களப்புவில் நடைபெற்றது.

இராமகிருஷ்ண மிஷனின் மட்டக்களப்பு கிளை மேலாளர் சுவாமி நீலமாதவானந்தஜீ மஹராஜ் தலைமையில் விழா நடைபெற்றது.

இந்த விழாவில் இராமகிருஷ்ண மிஷனின் மட்டக்களப்புக் கிளையின் உதவி முகாமையாளர் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

பல்துறையாளர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கிவைக்கப்பட்டதனைத் தொடர்ந்து பயிற்றுவித்த ஆசிரியர்களுக்கான கௌரவிப்பும் நடைபெற்றரது.

சா. நடனசபேசன், மட்டக்களப்பு