பதவி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் பதில் பொலிஸ் மாஅதிபர் தேசபந்து தென்னக்கோன் சிஐடியால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
2022 ஆம் ஆண்டு கோட்டா கோ கம போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் குறித்து தேசபந்து தென்னக்கோனைக் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் (சிஐடி) இன்று மாலை கைதுசெய்தனர்.
தேசபந்துவின் இல்லத்தில் அவரைப் பொலிஸார் கைதுசெய்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

