வடக்கிலும் கிழக்கிலும் தமிழர் பிரச்சினைகள் பிரித்தானிய உயர்ஸ்தானிகரிடம் எடுத்துரைக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அன்ட்ரூ பற்றிக் அவர்களை அவரது உத்தியோகபூர்வ இல்லமான கொழும்புவில் உள்ள வெஸ்ட் மின்ஸ்ரர் ஹவுசில் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் நேற்று (19) சந்தித்தார்.
அப்போது வடக்கிலும் கிழக்கிலும் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராயப்பட்டது.
அதில் முக்கியமாக மாகாண சபைத் தேர்தல் தொடர்பிலும் அரசியல் கைதிகள், செம்மணி, காணிப்பிரச்சனைகள், இராணுவத் தலையீடு தொடர்பிலும் நடந்து முடிந்த ஹர்த்தால் பற்றியும் கலந்துரையாடப்பட்டது.
அத்துடன் அரசின் வடக்கு கிழக்குக்கான வேலைத்திட்டங்கள் தொடர்பிலும் ஆராயப்பட்டது.
மட்டக்களப்பு சா. நடனசபேசன்

