இந்தியாவின் 79ஆவது சுதந்திர நாள் இன்று இலங்கையின் பல பாகங்களிலும் கொண்டாடப்பட்டது.
பிரதான நிகழ்ச்சி இந்திய உயர்ஸ்தானிகரின் உத்தியோகபூர்வ இல்லமான கொழும்புவிலுள்ள “இந்திய இல்லத்தில் ” உயர்ஸ்தானிகரின் தலைமையில் நடைபெற்றது.
இந்திய தேசியக் கொடியை ஏற்றிவைத்த உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, இந்தியப் பிரமதரின் சுதந்திர நாள் செய்தியை வாசித்தார்.
பல்வேறு கலை, கலாசார நிகழ்ச்சிகளும் ஒழுங்குசெய்யப்பட்டிருந்தன.
கண்டியிலுள்ள உதவி உயர்ஸ்தானிகராலயம், அம்பாந்தோட்டை, யாழ்ப்பாணம் ஆகிய இடங்களிலுள்ள கொன்சியுலர் அலுவலகங்களிலும் சுதந்திர நாள் கொண்டாட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.










