மலைப் பகுதிக்குச் செல்வதில் அவதானம்

மலைப் பகுதிக்குச் செல்வதில் அவதானம் தேவை என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மலைப் பகுதியின் பல்வேறு இடங்களில் தொடர்ச்சியாகக் கடும் மழை பெய்து வருகின்றது.

கண்டி பன்விலை தொடங்கி பம்பரல்லை, நக்கிள்ஸ், கபரகலை முதலான மலைப்பாங்கானதும் பள்ளத்தாக்குகள் நிறைந்ததுமான பகுதிகளில் அமைந்துள்ள வீதிகளில் கற்கள் சரிந்து வீழ்ந்து வருகின்றன.

இதனால் அடிக்கடி மரங்கள் முறிந்து வீழ்வதாலும் இப்பகுதிகளில் பயணிக்கும் பயணிகள் அவதானமாக பயணிக்க வேண்டும்.

இப்பகுதிகளில் அமைந்துள்ள வீதிகளில் வாகனத்தைச் செலுத்தும் சாரதிகள் மிக அவதானமாக வாகனங்களைச் செலுத்துமாறு பன்விலை பொலிஸார் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

இவ்வீதிகள் வழியே அடிக்கடி மண்மேடுகள் சரிந்து வீழ்வதாலும் வீதிப் போக்குவரத்திற்கு அபாயகரமான சூழ்நிலை காணப்படுகிறது.

கடும் மழையினால் பொது மக்களின் அன்றாட இயல்பு நிலையும் அடிக்கடி வெகுவாகப் பாதிப்பிற்குள்ளாகின்றது.

பன்விலை நிருபர் ம.நவநீதன் ‪