குளவிக்கொட்டுக்கு இலக்காகி மூவர் மருத்துவமனையில்

குளவிக்கொட்டுக்கு இலக்காகி மூவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் இன்று பிற்பகல் தலவாக்கலை பகுதியில் இடம்பெற்றுள்ளது.

தலவாக்கலை நகரில் இருந்து புகையிரத வீதியூடாக சென்றவர்களில் மூவர் இவ்வாறு குளவிக் கொட்டுக்கு இலக்கான நிலையில் லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அவர்களில் ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றம் செய்ய உள்ளதாக லிந்துலை வைத்திய சாலையில் உள்ள வைத்திய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

தலவாக்கலை புகையிரத வீதியூடாக சென்ற வேளையில் புகையிரத பாலத்தில் கட்டபட்டிருந்த குளவிக் கூடு கலைந்ததால் இந்த அனர்த்தம் ஏற்பட்டதாகப் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர்.

மஸ்கெலியா நிருபர்