மட்டு மாவட்டத்தில் அமைதியான முறையில் பரீட்சை

மட்டு மாவட்டத்தில் அமைதியான முறையில் பரீட்சை ஆரம்பமாகியுள்ளது.

கல்வி அமைச்சினால் முன்னெடுக்கப்படும் இவ்வாண்டுக்கான தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை, இன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஐந்து கல்வி வலயங்களிலும் இன்று காலை அமைதியான முறையில் ஆரம்பமானது.

மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட பரிட்சை நிலையங்களில் இன்று காலை மாணவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் இந்தப் பரிட்சைக்குச் சமுகமளித்தனர்.

ஆலயங்களில் வழிபாடுகளின் பின் தமது பெற்றோரின் ஆசிர்வாதத்துடன் பாடசாலை ஆசிரியர்களின் ஆசிர்வாதத்துடன் பரிட்சைக்கு ஆர்வத்துடன் சென்றதைக் காணக் கூடியதாக இருந்தது

வலய கல்வி அலுவலகத்தினால் பரீட்சை நிலையங்களுக்குத் தேவையான முன் ஆயத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்ததையும் காணக் கூடியதாக இருந்தது.

மட்டக்களப்பு வரதன்