இலங்கைக்கான உதவி இந்திய உயர்ஸ்தானிகராலயம் திகாம்பரம் சந்திப்பு ஒன்று ஹோட்டல் ஆகில்ஸில் நேற்று நடைபெற்றது.
இச் சந்திப்பில் இலங்கைக்கான இந்திய உதவி உயர்ஸ்தானிகர் டாக்டர் சத்தியாஞ்சல் பாண்டே, இந்திய இணை உயர்ஸ்தானிகர் (கண்டி) வீ. எஸ் சரண்யா, தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவர் பழனி திகாம்பரம், மஸ்கெலியா பிரதேச சபையின் தலைவர் க. இராஜ்குமார், பிரதித் தலைவர் ப. ராஜ் அசோக், சங்கத்தின் உயர் அதிகாரிகள் முதலானோர் கலந்து கொண்டனர்.
இலங்கையில் உள்ள இந்திய வம்சாவளி மக்களுக்கு இந்திய அரசின் மூலம் மனைகள் அமைத்துக் கொடுத்தல், கல்வி கற்று வேலை இன்றி உள்ள இளைஞர் யுவதிகளுக்கு வேலை வாய்ப்பு பெற்று கொடுத்தல் உள்ளிட்ட பல வேலைத்திட்டங்களை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் எனக் கோரிக்கை முன் வைக்கப்பட்டுள்ளது.
மஸ்கெலியா செ. தி. பெருமாள்



